இந்தியாவை மோசமாக சித்தரிக்கும் AI வீடியோக்கள்! அதற்கு அமெரிக்க பெண் கொடுத்த தரமான பதிலடி....!!!



ai-generated-fake-video-india

இந்திய நபர் ஒருவர் குப்பைக்கூளங்களுக்கு நடுவே நின்று, தனது வெறும் வயிற்றில் ரொட்டிகளைத் தேய்ப்பது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது. சுமார் 2.8 கோடி பார்வைகளை பெற்ற அந்த வீடியோ, தற்போது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அது உண்மையான காட்சியல்ல; AI வீடியோ தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட போலி காட்சி என்பது தெரியவந்துள்ளது.

இந்தியாவை மோசமான நிலையில் சித்தரிக்கும் நோக்கத்துடன் வீடியோ உருவாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, வீடியோவை பார்த்த அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்டன் ஃபிஷர், இன்ஸ்டாகிராமில் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.

இதையும் படிங்க: ஷாக் நியூஷ்! குழந்தை நல மருத்துவர் பிரீதி காஷ்யப் திடீரென உயிரிழப்பு... கதறும் பெத்த 2 பிஞ்சுகள்! அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!!

வைரலான வீடியோ குறித்து அமெரிக்க பெண் கண்டனம்

கிறிஸ்டன் ஃபிஷர் தனது பதிவில், யாரும் தங்களது வயிற்றில் ரொட்டிகளைத் தேய்ப்பதில்லை என்றும், இந்தியாவை மிகவும் மோசமாக காட்டுவதற்காகவே AI மூலம் இந்த காட்சி உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு நேரில் சென்றிராதவர்கள் இதுபோன்ற போலி வீடியோக்களைப் பார்க்கும்போது, அந்நாட்டைப் பற்றிய தவறான எண்ணம் உருவாக வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்தியா அற்புதமான மனிதர்கள் வாழும் அழகான நாடு என்றும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார். உண்மைத்தன்மையை சரிபார்க்காமல் இதுபோன்ற வீடியோக்கள் பகிரப்படுவது குறித்து சமூக வலைத்தள பயனர்களிடமும் விவாதம் எழுந்துள்ளது.

https://www.instagram.com/reel/DcyUmu_zkC5/?utm_source=ig_web_copy_link&igsi=MzRlODBiNWFlZA==

இந்தியர்களிடம் குவியும் பாராட்டு

இந்தியாவை குறிவைத்து பரப்பப்படும் போலி தகவல்களுக்கு எதிராக குரல் கொடுத்த கிறிஸ்டன் ஃபிஷரின் பதிவுக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள இந்தியர்கள், அவரது நேர்மையான கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் நன்றி மற்றும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

இதன் மூலம், செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்படும் காட்சிகளை உண்மை என நம்புவதற்கு முன்பு அவற்றின் நம்பகத்தன்மையை சரிபார்க்க வேண்டியதன் அவசியமும் மீண்டும் கவனத்திற்கு வந்துள்ளது.

 

இதையும் படிங்க: குடிகார மகனின் கொடுமை.. பெற்றோர், சகோதரன் சேர்ந்து செய்த கொடூர சம்பவம்!