
பெண் காவலரிடம் தாலிச்செயின் பறித்த குற்றவாளி, 3 மாதங்கள் கழித்து கைது..!!
இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண் காவலரிடம், தாலி செயின் பறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பிரம்மதேசம் காவல் நிலையத்தில், முதல் நிலை பெண் காவலராக பணியாற்றி வருபவர் சத்யா. கடந்த செப்டம்பர் மாதம் பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிச் சென்றுகொண்டிருந்தபோது, மரக்காணம் கூட்டுரோடு வளைவில் எதிரே வந்த மர்ம நபர்கள் அவரது கழுத்தில் இருந்த தாலி சங்கிலியை பறித்துச் சென்றனர்.
இதுதொடர்பாக பெண் காவலர் அளித்த புகாரின் பேரில் மர்ம நபர்களை அதிகாரிகள் தேடிவந்தனர். இந்த நிலையில், நேற்று இரவு திண்டிவனம் பாலத்திற்கு கீழே போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமான வாலிபரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போதுதான், அவர் குற்றச்செயலில் ஈடுபடுவது உறுதியான நிலையில், பெண் காவலரிடம் செயின் பறித்தும் அம்பலமானது.
Advertisement
Advertisement