பெண்களே பெண்ணை கூட நம்பாதீங்க.. தோழியின் வாழ்க்கையை ஸ்கெட்ச் போட்டு சீரழித்த செவிலியர்?.. இப்படியும் நடக்குமா? தமிழகத்தில் ஷாக்.!



Villupuram Nurse Arrested for Honey Trap Scam Targeting College Student

தோழியுடன் அன்பாக பழகிய பெண்ணை, இறுதியில் தோழியே கழுத்தறுத்து கொலை செய்வது போல மிகப்பெரிய சிக்கலில் சிக்கவைத்த அதிர்ச்சி சம்பவம் திண்டிவனத்தில் நடந்துள்ளது. பெண்கள் கவனமாக இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது இந்த செய்தித்தொகுப்பு.

சிவன் கோயில்:

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்தில் வசித்து வரும் 20 வயதுடைய இளம்பெண், அப்பகுதியில் செயல்பட்டு வரும் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். இதே பகுதியில் வசித்து வருபவர் அருந்ததி. இவர் செவிலியர் ஆவார். அருந்ததியும் - 20 வயது இளம்பெண்ணும் தோழிகள் ஆவார்கள். இவர்கள் செஞ்சி, அனந்தமங்கலத்தில் இருக்கும் சிவன் கோயிலுக்குச் சென்று வருவது வழக்கம்.

இதையும் படிங்க: கடன் கேட்டு வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. பாஜக பிரமுகரின் கொடூர செயல்..!

கல்லூரி மாணவி:

இதனிடையே, சில மாதங்களுக்கு முன்னர் கோயிலுக்குச் சென்றபோது, சமூக வலைத்தளத்தில் அறிமுகமான ஆதி (வயது 20) என்பவரை நேரில் சந்தித்து இருக்கின்றனர். பின் ஆதியின் மூலமாக சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவரான சந்துரு (வயது 20) என்பவரின் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. பின் சந்துரு - கல்லூரி மாணவி காதல் வயப்பட்டு இருக்கின்றனர்.

Crime news

காதல் நாடகம் & உடனடி நெருக்கம்:

காதல் தொடங்கிய பின் காதல் ஜோடி இருவரும் கோயில் அருகில் இருக்கும் முட்புதரில் தனியே சந்தித்து பேசி இருக்கிறது. பின் சந்துருவுடன் இளம்பெண் நெருக்கமாக இருந்ததை பெண்மணி தோழியிடம் கூறி இருக்கிறார். இதனை தனக்கு சாதகமாக்கிய அருந்ததி, நீங்கள் இருவரும் தனிமையில் இருந்ததை ஆதி & சந்துரு வீடியோ எடுத்து வைத்துள்ளனர். அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதாக மிரட்டி வருகிறார்கள். பணம் கொடுத்து அவர்களை சரிசெய்யலாம் என கூறியுள்ளார்.

மிரட்டல் & அடுத்தகட்ட நடவடிக்கை:

இதனால் அதிர்ந்துபோன மாணவி பாட்டியின் வீட்டில் இருந்த ரூ.3.5 லட்சம் பணத்தை திருடி அருந்ததியிடம் கொடுத்துள்ளார். இதனிடையே பணம் மாயமானதால் குடும்பத்தினர் விசாரிக்க, பயந்துபோன மாணவி அதிகளவு மாத்திரையை உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். பின் நடந்த விசாரணையில் உண்மை அம்பலமாகவே, காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணின் தோழி அருந்ததி, காதலன் சந்துரு, ஆதி ஆகியோரை கைது செய்துள்ளனர். 

இதையும் படிங்க: +2 மாணவி பாலியல் வன்கொடுமை.. காதலித்து திருணம் செய்வதாக அரங்கேறிய கொடுமை.!