கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம்! காலங்கடந்து தேர்வை ரத்து செய்ததை தேமுதிக கண்டிக்கிறது! விஜயகாந்த் ட்வீட்!

கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம்! காலங்கடந்து தேர்வை ரத்து செய்ததை தேமுதிக கண்டிக்கிறது! விஜயகாந்த் ட்வீட்!



vijayakanth talk about 10'th exam cancelled announcement

தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வராத நிலையில், மாணவர்கள் நலன் கருதி தமிழக அரசு, தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுகிறது என்றும், மாணவர்கள் தேர்வின்றி ஆல் பாஸ் செய்யப்படுவதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பை இன்று வெளியிட்டார்.

இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வைத் தமிழக அரசு காலங்கடந்து ரத்து செய்திருப்பதை தேமுதிக வன்மையாகக் கண்டிக்கிறது என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் இது குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில்  பதிவிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''அரசு ஒரு கொள்கை முடிவு எடுத்தால், அதில் உறுதியாக இருக்கவேண்டும். நாளும் ஒரு நிலைப்பாடு எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.அண்டை மாநிலமான தெலுங்கானா, ஐகோர்ட் கண்டணம், எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு, ஆசிரியர்கள் எதிர்ப்புக்குப் பிறகு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வைத் தமிழக அரசு ரத்துசெய்திருப்பதை தேமுதிக வன்மையாகக் கண்டிக்கிறது.

இதனால் மாணவர்கள்,பெற்றோர்கள், ஆசிரியர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
'கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம்' என்பது போல் ஹால்டிக்கெட், தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்தபிறகு,காலங்கடந்த முடிவை முதலிலேயே எடுத்திருந்தால், தேமுதிக வரவேற்றிருக்கும்