உருக்கமாக பேசிய விஜயகாந்த்..! விரைவில் மீண்டு வருவேன்..! மீண்டும் ஆட்டம் ஆரம்பமாகிவிட்டது..! - TamilSpark
TamilSpark Logo
அரசியல் தமிழகம்

உருக்கமாக பேசிய விஜயகாந்த்..! விரைவில் மீண்டு வருவேன்..! மீண்டும் ஆட்டம் ஆரம்பமாகிவிட்டது..!

உடல் நல கோளாறு காரணமாக தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் அரசியல் பணிகளில் இருந்து சற்று ஒதுங்கியே உள்ளார். இந்நிலையில் சென்னை கொரட்டூரில் தே.மு.தி.க சார்பில் 101 பானைகளில் பொங்கல் வைத்து பொதுமக்களுடன் இணைந்து தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா, துணைச் செயலாளர் சுதீஷ் உள்ளிட்டோர் பொங்கல் விழாவைக் கொண்டாடி பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கினர்.

பின்னர் மேடையில் பேசிய பிரேமலதா நடந்து முடித்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தே.மு.தி.க அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாகவும், இதன்மூலம் தேமுதிகவின் ஆட்டம் மீண்டும் ஆரம்பமாகி விட்டதாகக் கூறினார். மேலும், அடுத்து வர இருக்கும்  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் தே.மு.தி.க அதிக இடங்களைப் பிடிக்க தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்று தொண்டர்களைக் கேட்டுக்கொண்டார்.

அதன்பிறகு கேப்டன் பேசும்போது, தமக்காகப் பிரார்த்தனை மேற்கொள்ளும் தொண்டர்கள் தான் தமது முதல் கடவுள் என்றும், தனது தொண்டர்களுக்காக உடல் நிலை  சரியாகி மீண்டும் வருவேன் என உருக்கமாக பேசினார் விஜயகாந்த்.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo