அரசியல் தமிழகம்

கேப்டன் விஜயகாந்தின் பக்கா மாஸ் ரீஎண்ட்ரி! உச்சகட்ட மகிழ்ச்சியில் தேமுதிக தொண்டர்கள்!

Summary:

vijayakanth re endry

தேமுதிக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றிப்பெற்றவர்களுக்கான பாராட்டு விழா மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் பிரேமலதா விஜயகாந்தின் திருமணநாள் விழா இன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. 

நிகழ்ச்சியில் பேசிய விஜயகாந்த், மக்களுக்கு நல்லது செய்ய சீக்கிரம் மீண்டும் வருவேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். பிரேமலதா பேசுகையில், “தொண்டர்கள் தான் எங்கள் குடும்பம். எங்கள் திருமண நாளை உங்களுடன் கொண்டாட வேண்டும் என எண்ணி தான் இந்த நிகழ்ச்சி இன்று நடைபெற்றது என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா 2021-ம் ஆண்டு தேர்தலுக்கு கிராமம் கிராமமாக சென்று சுற்றுப்பயணம் மேற்கொள்வோம். விஜயகாந்த் மீண்டும் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்வார்.அதேபோல் 2021 -ம் ஆண்டு தேர்தலில் தேமுதிக மிகப்பெரிய கட்சியாக வரும் என தெரிவித்தார்.


Advertisement