தமிழகம் Covid-19

இந்த மனசுதாங்க.. நம்ம கேப்டனை தமிழகமே கொண்டாடுகிறது.! விஜயகாந்த் என்ன செய்துள்ளார் பார்த்தீங்களா.?

Summary:

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. க

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனவால் உயிரிழப்புகளும் அதிகரித்து வருவதால் மத்திய, மாநில அரசுகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக நாளை முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது.

இந்நிலையில் ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியை கரோனா சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு பயன்படுத்திக்கொள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் அனுமதி வழங்கியுள்ளார். இதுதொடர்பாக தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவரது டுவிட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதிய இடவசதி இல்லாத சூழ்நிலை உள்ளது. எனவே கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க,  செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூரில் உள்ள ஆண்டாள் அழகர் பொறியியல்  கல்லூரியை தாராளமாக பயன்படுத்திக்  கொள்ள  தமிழக அரசுக்கு தெரிவித்துள்ளேன். 

மேலும், கடந்த ஆண்டு கொரோனா தாக்கத்தின் போது, கொரோனா நோயாளிகளுக்காக ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியை பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளித்திருந்தேன். அதேபோல் இந்த ஆண்டும் ஆண்டாள் அழகர் கல்லூரியை வழங்குவதோடு,  இது தொடர்பாக தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.


Advertisement