அரசியல் தமிழகம்

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நிலையில் என்ன பிரச்னை.? மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட தகவல்.!

Summary:

vijayakanth health condition

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்திற்கு நேற்று திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கே நடந்த பரிசோதனையில் விஜயகாந்திற்கு லேசான கொரோனா நோய் அறிகுறிகள் இருந்ததாக தகவல்கள் வெளியாகின.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்திற்கு உடல்நல கோளாறு காரணமாக 6 மாதத்திற்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனைக்கு செல்வது வழக்கம். அந்தவகையில் அவர் மருத்துவனைக்கு சென்றபோது அவருக்கு லேசான கொரோனா அறிகுறிகள் தென்பட்டதால் மருத்துமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியானது. ஏற்கெனவே விஜயகாந்தின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அவருக்கு கொரோனா என்ற தகவலால் தேமுதிக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்தநிலையில் மருத்துவ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்திற்கு கடந்த 22 ஆம் தேதி நடந்த மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தற்போது மருத்துவமனையில் அவரது உடல்நிலை சீராக உள்ளது. அவர் கூடிய விரைவில் பூரண குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Advertisement