அரசியல் தமிழகம்

தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு.! கேப்டன் விஜயகாந்த் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு.!

Summary:

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்த பிறகு பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்த

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்த பிறகு பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்தநிலையில் அனைத்து காட்சிகளிலும் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் வாங்கப்பட்டு வருகிறது. 

மேலும், வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் உச்சகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 17 சட்டமன்ற தொகுதிகளை ஒதுக்கியும், ஒரு ராஜ்யசபா உறுப்பினர் பதவியும் கொடுக்க அதிமுக முன்வந்து உள்ளதாக தகவல் வெளியானது.

இந்தநிலையில், தேமுதிக மாவட்டச் செயலாளர்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் நாளை காலை 10:30 மணிக்கு நடைபெறும் அக்கட்சி தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எனவே நாளை காலை 10:30 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த அறிவிப்பு வெளியாகி இருப்பது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Advertisement