தமிழகத்தில் யாருக்கு முதலில் தடுப்பூசி.? அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்ட அறிவிப்பு.!

தமிழகத்தில் யாருக்கு முதலில் தடுப்பூசி.? அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்ட அறிவிப்பு.!


vijayabaskar-talk-about-vaccine

கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் ஆரம்பத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்தநிலையில், தற்போது கொரோனா பரவல் சமீப காலமாக குறைந்து வருகிறது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணிகள் இறுதி கட்டத்தில் உள்ள நிலையில், இந்தாண்டு தொடக்கத்தில் தடுப்பூசி ஒத்திகை செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. 

கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளநிலையில், தமிழகத்தில் முன்களப் பணியாளர்களுக்கு முதலில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

coronaஇதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், முதலாவதாக முன்கள பணியாளர்களுக்கும் பின்னர் பொதுமக்களுக்கும் தடுப்பு ஊசி செலுத்தப்படும். கோவிஷீல்டு, கோவேக்ஸின் தடுப்பூசிகளுக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி தந்தது மக்களுக்கு நம்பிக்கை அளித்து உள்ளது. தமிழகத்தில் முதல்கட்டமாக 2.5 கோடி மருந்துகளை சேமித்து வைப்பதற்கான வசதிகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது என தெரிவித்தார்.