தமிழகம்

கொரோனா பாதித்த எஸ்.பி.பி., வசந்தகுமார் உடல்நிலை குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி!

Summary:

Vijayabaskar talk about spb and vasanthkumar health

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்திலும்,கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் கடந்த 5ம் தேதி சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்து  சிகிச்சை பெற்று வருகிறார்.  கடந்த 13ஆம் தேதி அவரது உடல் நிலை மிகவும் மோசமான நிலையில் அவர்  செயற்கை சுவாச கருவிகள் உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அதேபோல் காங்கிரஸ் எம்.பி வசந்தகுமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காங்கிரஸ் எம்.பி வசந்தகுமாருக்கு வெண்டிலேட்டர் மூலம் சுவாசம் நடைபெறுவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், "திரைப்பட பாடகர் எஸ்.பி.பி. உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. வசந்தகுமார் எம்.பி.க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார். 


Advertisement