வதந்தியால் யாரும் பீதியடைய வேண்டாம்! கொரோனா நடவடிக்கை குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்ட அதிரடி தகவல்!

வதந்தியால் யாரும் பீதியடைய வேண்டாம்! கொரோனா நடவடிக்கை குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்ட அதிரடி தகவல்!


vijayabaskar talk about coronovirus

 சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா  வைரஸ் தற்போது 70-க்கும் மேற்பட்ட நாடுகளில் அதிதீவிரமாக பரவி வருகிறது. மேலும் இந்த கொரோனா வைரஸ் தாக்குதலால்  இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் 3000க்கும் அதிகமானோர் பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உலக நாடுகளே பெரும் பீதியில் உள்ளது.

இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவிய நிலையில், 41 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தி பராமரிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் ஓமனில் இருந்து திரும்பிய தமிழகத்தை சேர்ந்த ஒருவரும் கொரோனோவால் பாதிக்கப்பட்டு ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.  

Coronovirus

இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கொரோனா குறித்து பரவி வரும் வீண் வதந்திகளை நம்பி யாரும் அச்சமடைய வேண்டாம். கொரோனா குறித்து சமூக வலைத்தளங்களில் தவறான வதந்தி பரப்பினால் காவல்துறை மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். விமான நிலையங்களில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

மேலும் பள்ளிகள், அங்கன்வாடிகள், தொழிற்சாலைகள், போன்ற பெரும் நிறுவனங்களில் கொரோனா தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மதுரை புறநகர் பகுதியில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனி வார்டுகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஓமனில் இருந்து திரும்பியவரின் மனைவிக்கு கொரோனா பாதிப்பு இல்லை. மேலும் கூடுதலாக முகக் கவசங்கள், பாதுகாப்பு உபகரணங்கள் வாங்குவதற்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். இதுவரை 1,22,318 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா என  பரிசோதிக்கப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார்.