நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி வழக்கில் இன்று உயர்நீதிமன்றம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
உதவியாளர் மரணத்தால் கண்ணீர் விட்டு கதறும் அமைச்சர் விஜயபாஸ்கர்!

புதுக்கோட்டை மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவரும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களின் நேர்முக உதவியாளர் பவ் (எ) வெங்கடேசன் இன்று ஏற்பட்ட சாலை விபத்தில் இயற்கை எய்தினார்.
புதுக்கோட்டை மாவட்டம், பரம்பூரை சேர்ந்த பவ் என்கிற வெங்கடேசன் கடந்த 8 ஆண்டுகளாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தனி உதவியாளராக இருந்து வருகிறார். மேலும் இவர் அ.தி.மு.க.வில் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவராகவும் இருந்தார்.
இந்நிலையில் வெங்கடேசன், சென்னைக்கு சென்ற அமைச்சர் விஜயபாஸ்கரை திருச்சி விமான நிலையத்தில் வழிஅனுப்பி வைத்து விட்டு காரில் அவரது சொந்த ஊரான பரம்பூருக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது கார் அன்னவாசல் அருகே உள்ள கிளிக்குடி வீரபெருமாள்பட்டி சாலையில் வந்தபோது, எதிர்பாராதவிதமாக சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தில் மோதியது.
இந்த விபத்தில் காரில் இருந்த அமைச்சரின் தனி உதவியாளர் வெங்கடேசன், டிரைவர் செல்வம் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்த அமைச்சர் விஜயபாஸ்கர் வெங்கடேஷின் இல்லத்திற்கு சென்று இரங்கல் தெரிவித்தார். வெங்கடேஷ் குடும்பத்தினரை பார்த்து கண்ணீர் விட்டு அழுதார் அமைச்சர் விஜயபாஸ்கர்.