சன் டிவி மைக்கை தூக்கி வீசிய அமைச்சர் விஜயபாஸ்கர்.! கொந்தளித்த மு.க.ஸ்டாலின்.!

சன் டிவி மைக்கை தூக்கி வீசிய அமைச்சர் விஜயபாஸ்கர்.! கொந்தளித்த மு.க.ஸ்டாலின்.!


vijayabaskar-angry-on-press-meet

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா ஊரடங்கு காலத்திலிருந்து நிவாரணம் வழங்கி வருகிறார். இந்த நிலையில் "நம்ம விஜயபாஸ்கர் வீட்டு சீர்" என்ற பெயரில் வெண்கல பொங்கல் பானை மற்றும் பொங்கலுக்கு தேவையான பொருட்கள் அடங்கிய பரிசுப் பொருளை நேற்று முதல் விராலிமலைத் தொகுதியில் வழங்க தொடங்கியுள்ளார். 

ரூ.1000 மதப்புள்ள இந்த சீர் தொகுதி முழுவதும்  சுமார் ஒரு லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று விராலிமலையில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது தமிழகத்தில் எல்லாரும் தான் கொடுக்குறாங்க. ஓரவஞ்சனையாக செய்தி போடக்கூடாது என்று சொல்லிக் கொண்டே சன் டி.வி. மைக்கை எடுத்திருங்க என்று சொல்லி மைக்கை தூக்கி போட்டுள்ளார்.

மேலும், திமுக கட்சியில் எல்லோரும் கொடுக்கிறதையும் செய்தியாக போடவேண்டும் அல்லவா என கூறினார். பின்னர் சன் டிவி மைக் அங்கிருந்து எடுத்த பிறகே பேட்டி கொடுத்தார். இந்த சம்பவத்தால் பத்திரிக்கையாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். 

இது குறித்து தகவல் அறிந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவரது ட்விட்டர் பதிவில், ''புதுக்கோட்டை பத்திரிகையாளர் சந்திப்பின் போது சன் டி.வி. மைக்கைத் தூக்கி வீசியிருக்கிறார் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர். அதிமுக அமைச்சரவையையே மக்கள் தூக்கி வீசும் காலம் நெருங்கி வருகிறது. ஊடகங்களை மிரட்டுவதும், மமதையும் அதிமுக அமைச்சர்களுக்கு வழக்கமானதுதான்; மக்களின் எதிர்வினை தேர்தலில் எதிரொலிக்கும்!" என பதிவிட்டுள்ளார்.