வீடியோ: கஜா புயலில் மயிரிழையில் உயிர் தப்பிய வயதான பெண்மணி! உருக்கமான காட்சிகள்
கஜா புயல் பாதிப்பால் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கோரத்தாண்டவம் ஆடிய கஜா புயலால் டெல்டா மாவட்டங்களில் பலர் வீடுகளை இழந்து, விவசாய பயிர்கள், மரங்கள், ஆடு மாடுகள் ஆகியவற்றை இழந்து தவித்துவருகின்றனர்.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று சுழன்றடித்த இந்த கஜா சூறாவளியால் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதிகளில் அதிகமான மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. ஓட்டு வீடுகளின் ஓடுகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டு நொறுங்கின. சில மரங்கள் கூரை வீடுகளில் மேல் விழுந்தது அந்த வீடுகள் தரைமட்டமாகியுள்ளன.
அவ்வாறு இந்த புயலால் பாதிக்கப்பட்டு மயிரிழையில் உயிர் பிழைத்துள்ளார் ஒரு வயதான பெண்மணி. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்த மேற்பனைக்காடு கிராமத்தில் ஒரு குடிசை வீட்டில் தனியாக வாழ்ந்து வருகிறார் அந்த பெண்மணி. அன்று புயல் அடித்து சமயத்தில் அவர் மட்டும் வீட்டில் தனியாக உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது அடித்த சூறாவளிக்காற்றில் வீட்டின் முன் நின்று கொண்டிருந்த பெரிய வேப்பமரம் ஒன்று சாய்ந்து கூரையின் மேல் விழுந்துள்ளது. அந்த சமயத்தில் நல்லவேளையாக மரம் விழுவதற்கு எதிர்புறத்தில் உள்ள மூலையில் அந்த பெண் ஒதுங்கியதால் உயிர் பிழைத்துள்ளார். இதைப்பற்றி வெளியாகியுள்ள இந்த வீடியோ பதிவினை பாருங்கள்: