கடவுளே! என்ன ஒரு சோதனை... கணவர் இறந்த துக்கத்தில் 7 மாத கர்ப்பிணி எடுத்த விபரீத முடிவு! அனாதையாக பரிதவிக்கும் 4 வயது குழந்தை.... வேலூரில் நடந்த அதிர்ச்சி!!!
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே கணவர் உயிரிழந்த சோகத்தில் 7 மாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கணவர் இறந்த சில நாட்களிலேயே இந்த துயர முடிவை அவர் எடுத்துள்ளார். 4 வயது பெண் குழந்தையை தவிக்கவிட்டு தாய் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கணவர் திடீர் உயிரிழப்பு
கவசம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 34 வயதான சரத்குமார், ராணிப்பேட்டை சிப்காட்டில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். இவருக்கும் 28 வயதான மோனிஷாவுக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தம்பதிக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. மேலும், மோனிஷா 7 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
இதையும் படிங்க: தலைமை ஆசிரியர் அறைக்குள் புகுந்த 7 பிளஸ்-2 மாணவர்கள்.. சரமாரி தாக்குதல்.. திருப்பூரில் பரபரப்பு!
இந்த நிலையில், கடந்த 13-ம் தேதி சரத்குமார் திடீரென உயிரிழந்தார். கணவரின் எதிர்பாராத மரணம் மோனிஷாவை பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கியதாக கூறப்படுகிறது. கணவரை இழந்த வேதனையில் அவர் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அழுதபடி இருந்துள்ளார்.
வீட்டில் தனியாக இருந்தபோது விபரீத முடிவு
இதனிடையே, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மோனிஷா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. 7 மாத கர்ப்பிணியாக இருந்த அவர் உயிரிழந்த தகவல் உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகவலறிந்த கே.வி.குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
கணவரின் மறைவால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக மோனிஷா இந்த முடிவை எடுத்தாரா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கே.வி.குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, உயிரிழப்புக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
4 வயது குழந்தை தவிப்பு
கணவரை இழந்த சில நாட்களிலேயே 7 மாத கர்ப்பிணியான மோனிஷாவும் உயிரிழந்த நிலையில், தம்பதியின் 4 வயது பெண் குழந்தை தற்போது ஆதரவின்றி தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த உயிரிழப்புகள் கவசம்பட்டு கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன. 7 மாத கர்ப்பிணி தற்கொலை தொடர்பாக போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: புதுச்சேரியில் இளம் பெண் டாக்டர் தற்கொலை.. அறையில் சிக்கிய உருக்கமான கடிதம்!