காதல் திருமணத்தால் கோபம்? மருமகனை காலி செய்த மாமனார்.. வன்மத்துடன் வெறிச்செயல்.!



Vellore Horror Father Allegedly Hires Hitmen to Kill Son-in-Law Over Love Marriage

மகளின் காதல் திருமணத்தை ஏற்றுக்கொள்ள மனமில்லாத தந்தை, கூலிப்படையை ஏவி மகளின் கணவரை கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது.

காதல் திருமணம்:

வேலூர் மாவட்டத்தில் உள்ள கே.வி. குப்பம், கொள்ளமங்கலம் பகுதியில் வசித்து வருபவர் ராகவன். இவரின் மனைவி சுவேதா. இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னதாக பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வந்துள்ளனர்.

இதையும் படிங்க: 'என் நம்பரை பிளாக் பண்றியா' காதலனை வீடுபுகுந்து கதைமுடித்த காதலி.. பகீர் சம்பவம்.!

கூலிப்படை ஏவி கொலை:

இந்நிலையில், சம்பவத்தன்று வேலைக்குச் சென்ற தனது மனைவி சுவேதாவை அழைத்து வர ராகவன் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது, பசுமாத்தூர் பகுதியில் ராகவன் 5 பேர் கும்பலால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். இந்த விஷயம் குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ராகவனை அவரது மாமனார் கூலிப்படை ஏவி கொலை செய்தது அம்பலமானது.

vellore

குற்றவாளிகள் கைது:

இதனையடுத்து, சுவேதாவின் தந்தை அமுல்ராஜ் கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்ததாக உறவினர் கார்த்திக் என்பவரும் கைது செய்யப்பட்டார். விசாரணையில், காதல் திருமணம் செய்து ராகவன் மகளை கொடுமை செய்து வந்ததால் கொலை செய்தேன் என அமுல்ராஜ் வாக்குமூலம் அளித்து இருக்கிறார். கூலிப்படையை சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.