தமிழகம்

தாலி கட்டியதும் அண்ணன் முறை காதலனுடன் ஓட்டம் பிடித்த மணப்பெண்..! கண்ணீரில் புதுமாப்பிள்ளை..!

Summary:

தாலி கட்டியதும் அண்ணன் முறை காதலனுடன் ஓட்டம் பிடித்த மணப்பெண்..! கண்ணீரில் புதுமாப்பிள்ளை..!

வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 21 வயது இளம்பெண், 12 ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார்‌. அதே கிராமத்தைச் சேர்ந்த அண்ணன் உறவு முறை கொண்ட இளைஞருக்கும், இளம் பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மலர்ந்துள்ளது‌. 

இந்த விஷயம் இருதரப்பு பெற்றோருக்கும் தெரியவரவே, இருவரும் அண்ணன் தங்கை உறவு முறை என்பதால் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், வேறொரு வாலிபருடன் திருமண ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, கடந்த 14ஆம் தேதி திருமணம் நடைபெற்ற நிலையில், திருமணம் முடிந்ததும் மணமக்கள் மணப்பெண் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்‌. அப்போது, குடும்பத்தினர் கண்களில் மண்ணைத் தூவிய பெண்மணி, அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement