சிம்புவின் அரசன் படத்தில், "ராஜன் வகையறா"- வெற்றிமாறன் ஏமாற்றமாட்டார்... ரசிகர்கள் சுவாரசியம்.!
இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி... மார்க்கெட்டுக்கு போனால் மாரடைப்பே வந்திடும் போல.?!
கோடை வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், விவசாய நிலங்களில் நடைபெறும் பணிகள் வறட்சி காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக காய்கறி உற்பத்தி கணிசமாக குறைந்துள்ளது.
இதனால் சந்தைகளுக்கு வரும் காய்கறிகளின் வரத்து மிக குறைந்துள்ளதால், அவற்றின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. குறிப்பாக கேரட், பீன்ஸ், பீட்ரூட், வெண்டைக்காய், கத்தரிக்காய், புடலங்காய், பாகற்காய் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் கிலோவுக்கு ரூ.15-க்கும் மேல் உயர்ந்துள்ளன.

அதேபோல் தக்காளி, வெங்காயம் போன்ற அத்தியாவசிய காய்கறிகளின் விலையும் தற்போது இரட்டிப்பாக உயர்ந்துள்ளது. இதற்கிடையில், வார இறுதி நாட்களில் அதிகமாக வாங்கப்படும் இறைச்சியின் விலையும் உயர்ந்திருப்பது பொதுமக்களுக்கு கூடுதல் சுமையாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: BREAKING: மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! எண்ணெய் விலையும் உயர்ந்தது...!!!
ஏற்கனவே அன்றாட செலவுகள் அதிகரித்து வரும் சூழலில், காய்கறி மற்றும் இறைச்சி விலை உயர்வு குடும்பத்தலைவிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், குடும்பத்தலைவர்கள் மத்தியில் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: #அதிர்ச்சி: ஒரு கிலோ..ரூ.1500.! டபுளானது விலை.. அதிர்ச்சியில் மக்கள்.!