#அதிர்ச்சி: ஒரு கிலோ..ரூ.1500.! டபுளானது விலை.. அதிர்ச்சியில் மக்கள்.!
சென்னையின் காசிமேடு மீன் சந்தையில் தற்போது மீன்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. மீன்பிடி தடைக்காலம் அமலில் இருப்பதால், பெரிய படகுகள் கடலுக்கு செல்லாமல், பைபர் படகுகள் மூலம் மட்டுமே மீன்பிடி தொழில் நடைபெற்று வருகிறது.
இதன் காரணமாக சந்தைக்கு வரும் மீன்களின் அளவு மிகவும் குறைந்துள்ளது. குறைந்த வரத்து காரணமாக மீன்களின் விலை இரு மடங்கு வரை உயர்ந்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போதைய நிலவரப்படி, ஒரு கிலோ வஞ்சிரம் மீன் சுமார் ₹1500, சங்கரா மீன் ₹800, நெத்திலி மீன் ₹750, இறால் ₹850 வரை விற்பனையாகிறது. இந்த விலை உயர்வு பொதுமக்களுக்கு சுமையாக மாறியுள்ளது. ஏற்கனவே ஆட்டுக்கறி ஒரு கிலோ ₹900 முதல் ₹1000 வரை விற்பனையாகி வருகிறது.
இதையும் படிங்க: BREAKING: மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! எண்ணெய் விலையும் உயர்ந்தது...!!!
அதேபோல் சிக்கன் விலையும் ₹250க்கு மேல் இருப்பதால், அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வு மக்கள் வாழ்க்கையை பாதித்து வருகிறது.இந்நிலையில், மீன்களின் விலை மேலும் அதிகரித்திருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.