ஆத்திரத்தில் அழிந்த குடும்பம்... மெசேஜ்ஜில் தொடங்கிய தகராறு! அடுத்த நொடி கணவன் தூக்கிட்டு தற்கொலை...! வீடியோ பார்த்த கர்ப்பிணி மனைவி எடுத்த விபரீத முடிவு!!!
பெங்களூரில் பணியாற்றி வந்த இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர், மனைவியுடன் ஏற்பட்ட தொலைபேசி வாக்குவாதத்துக்குப் பிறகு தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உயிரிழப்பு தொடர்பான காட்சி கர்ப்பிணி மனைவியின் கைபேசிக்கு சென்றடைந்ததைத் தொடர்ந்து, அவரும் தற்கொலைக்கு முயன்ற நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
தொலைபேசி வாக்குவாதம் சோகத்தில் முடிந்தது
இமாச்சலப் பிரதேசத்தின் அமீர்பூரைச் சேர்ந்த ரோஹித், பெங்களூரில் தங்கி பணியாற்றி வந்தார். அவரது மனைவி நந்தினி சொந்த ஊரில் கர்ப்பிணியாக இருந்தார். தகவலின்படி, இருவருக்கும் தொலைபேசியில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் கடும் மனஉளைச்சலில் இருந்த ரோஹித், தங்கியிருந்த அறையிலேயே தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
வீடியோவை பார்த்த கர்ப்பிணி மனைவி எடுத்த விபரீத முடிவு
ரோஹித் தூக்கில் தொங்கியிருந்த காட்சி நந்தினியின் கைபேசிக்கு அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த வீடியோவை பார்த்த அவர் கடும் அதிர்ச்சியடைந்து, மனமுடைந்து கழிப்பறை சுத்திகரிப்பு திரவத்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
போலீசார் தீவிர விசாரணை
உயிருக்குப் போராடிய நிலையில் மீட்கப்பட்ட நந்தினி, மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையில், ரோஹித்தின் உயிரிழப்புக்கான காரணம், தம்பதியருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின்னணி மற்றும் வீடியோ அனுப்பப்பட்ட சூழல் உள்ளிட்ட அனைத்து கோணங்களிலும் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: என்னால சித்திரவதை தாங்க முடியல... அவனை சும்மா விடாதீங்க..! வீடியோ வெளியிட்டு பெண் பொறியாளர் எடுத்த விபரீத முடிவு... அதிர்ச்சி வீடியோ!!!