ரகசியமாக பதிவு செய்யப்பட்ட வீடியோ.. கண்ணீர் விட்ட இளம்பெண்.. சிக்கிய இளைஞர்.. நடந்தது என்ன? பெண்களே கவனம்.! 



Chennai Man Arrested for Secretly Filming Woman and Sharing Obscene Videos on Social Media

33 வயது இளம்பெண்ணை ஆபாசமாக வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதாக இளைஞர் கைது செய்யப்பட்டார். 

இளம்பெண்: 

சென்னையில் உள்ள டி.பி. சத்திரம் பகுதியில் 33 வயதுடைய பெண்மணி ஒருவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் வீட்டு வேலை செய்து வருகிறார். இதனிடையே, சில நாட்களுக்கு முன்னதாக பெண் நைட்டி அணிந்து பாத்திரம் கழுவி இருக்கிறார். 

இதையும் படிங்க: கடலூரில் பயங்கரம்.. சகோதரர்கள் வெட்டிக்கொலை.. உறவினர்கள் கொந்தளிப்பு.. பதற்றம்.! காவல்துறை குவிப்பு.! 

செல்போனில் வீடியோ: 

அப்போது, பெண்ணை ஒருவர் செல்போனில் ரகசியமாக வீடியோ எடுத்து, அதனை ஆபாச குரல் பதிவுடன் இணைத்து சமூக வலைத்தளங்களில் அவதூறாக பதிவிட்டு இருக்கிறார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த இளம்பெண் டி.பி. சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

Crime news

விசாரணை: 

இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், டி.பி. சத்திரம் பகுதியில் வசித்து வந்த பரத் என்ற 28 வயது இளைஞரை கைது செய்தனர். இவர் பி.காம் பட்டதாரி ஆவார். அவரின் செல்போனை ஆய்வு செய்ததில், பல பெண்களை ஆபாசமாக படம்பிடித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வந்தது கண்டறியப்பட்டது. 

இதனையடுத்து பரத்தின் மீது பெண் வன்கொடுமை உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

இதையும் படிங்க: ஒன்று கூடி தாக்கிய சகஊழியர்கள்.. தப்பிக்க 4 வது மாடியில் இருந்து குதித்த இளைஞர்.. போராடி பறிபோன உயிர்.!