ஒன்று கூடி தாக்கிய சகஊழியர்கள்.. தப்பிக்க 4 வது மாடியில் இருந்து குதித்த இளைஞர்.. போராடி பறிபோன உயிர்.!
பணியிடத்தில் நடந்த தாக்குதலில் இருந்து தப்பிக்க மாடியில் இருந்து கீழே குதித்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஊழியர்:
இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஆகாஷ் (வயது 23). இவர் சென்னையில் உள்ள அண்ணா நகரில் தற்போது தங்கி இருக்கிறார். வாடகை வீட்டில் தங்கி இருக்கும் ஆகாஷ், தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் கணக்காளராக வேலை செய்கிறார்.
இதையும் படிங்க: ஒரேயொரு மிரட்டல்.. ரௌடிக்கு ஸ்கெட்ச் போட்டு தூக்கிய இளைஞர்.. சென்னை சம்பவத்தில் திடுக் திருப்பம்.!
தற்கொலை முயற்சி:
இதனிடையே, கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக வழக்கம்போல பணிக்கு வந்த ஆகாஷ், கட்டிடத்தின் நான்காவது மாடியில் இருந்து குதித்து இருந்தார். இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த ஆகாஷை மீட்ட அக்கம் பக்கத்தினர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர்.

கையாடல்?
மேலும், ஆகாஷின் உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து அண்ணாநகர் காவல்துறையினரும் விசாரணை நடத்தி வந்தனர். முதற்கட்ட விசாரணையில், டிராவல்ஸ் நிறுவனத்தில் ரூ.30 லட்சம் பணம் கையாடல் நடந்துள்ளது. இந்த விஷயம் குறித்து கணக்காளராக இருந்து வந்த ஆகாஷை டிராவல்ஸ் நிறுவன அதிகாரிகள் சரமாரியாக தாக்கி இருக்கின்றனர்.
பலி:
மேலும், பணத்தை ஆகாஷ் கையாடல் செய்திருக்க வேண்டும் என தாக்கி ஒப்புக்கொள்ள வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் வலி தாங்க இயலாமல் ஆகாஷ் தப்பி மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார் என்பது தெரியவந்தது. இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ஆகாஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையும் படிங்க: தலை முடியை பிடுங்கி சித்ரவதை.. 3 வயது பிஞ்சு கொடூர மரணம்.. தாயின் 2 வது கணவன் வெறிச்செயல்.!