வீரப்பனை கொல்ல போலீஸாருக்கு உதவிய பெண்; பரிசு கேட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்..!!

வீரப்பனை கொல்ல போலீஸாருக்கு உதவிய பெண்; பரிசு கேட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்..!!



veerappan---encounder---2014

சந்தன கடத்தல் வீரப்பன் கொல்லப்படுவதற்கு காவல்துறையினருக்கு உடந்தையாக இருந்து தகவல் தெரிவித்த பெண். தற்பொழுது பரிசுத் தொகையை கேட்டு புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் மற்றும் கர்நாடகம் காவல்துறையினருக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்த சந்தன கடத்தல் வீரப்பன் கடந்த 2004ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார். இன்றுடன் 14 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் சண்முகப்பிரியா என்பவர் இந்த கொலைக்கு தான் உதவியதாகவும் அதனால் மத்திய மாநில அரசுகள் அறிவித்த எந்த சலுகையும் எனக்கு வழங்கப்படவில்லை என்று புகார் தெரிவித்துள்ளார்.

Tamil Spark

கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்த சண்முகப்பிரியா சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி முத்துலட்சுமிக்கு நெருங்கிய தோழி ஆவார். இதன் வாயிலாக வீரப்பன் பற்றிய தகவல்களை அதிரடிப்படை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் தான் அதிரடி படையினர் சந்தன கடத்தல் வீரப்பன் சுற்றி சுற்றி வளைத்து என்கவுண்டர் செய்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.

வீரப்பனை என்கவுண்டர் செய்வதற்கு மத்திய அரசு ரூபாய் 5 கோடியும் மாநில அரசு ஊக்கத்தொகையுடன் வீட்டு மனை பட்டா வழங்குவதாக அறிவித்திருந்தது. ஆனால் இன்றுவரை எந்த பரிசுத்தொகையும் சலுகையும் வழங்கப்படவில்லை என்று புகார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.