தேசியக் கொடியை மதிப்போம், திராவிடக் கொடியும் பிடிப்போம்! கவிஞர் வைரமுத்து அதிரடி டுவீட்! - TamilSpark
TamilSpark Logo
தமிழகம்

தேசியக் கொடியை மதிப்போம், திராவிடக் கொடியும் பிடிப்போம்! கவிஞர் வைரமுத்து அதிரடி டுவீட்!

இந்தியாவின் புதிய கல்விக் கொள்கை ஜூலை 29 -ல் மத்திய அரசு வெளியிட்டது. இந்த புதிய கல்விக் கொள்கை குறித்து எதிர்க்கட்சிகளில் இருந்து சில ஆதரவு கருத்துகளும், எதிர்ப்பு கருத்துகளும் வருகின்றன. 

மத்திய அரசு நடைமுறைக்கு கொண்டு வர உள்ள புதிய கல்வி கொள்கைக்கு ஆதரவாக பலர் பேசி வரும் நிலையில், இதற்க்கு சிலர் எதிரிப்பு தெரிவித்தும் வருகின்றனர். இந்நிலையில் இதுதொடர்பாக கவிஞர் வைரமுத்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். 

அவரது ட்விட்டர் பதிவில், அண்ணா - கலைஞர் இறுதி செய்ததும்,  எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா உறுதி செய்ததும் இருமொழிக் கொள்கைதான். முதலமைச்சர் பழனிசாமி அரசும் அதைத் தாங்கி பிடிக்க தயங்க தேவையில்லை. தேசியக் கொடியை மதிப்போம்; திராவிடக் கொடியும் பிடிப்போம்" என்று தெரிவித்துள்ளார். 
 


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo