வைரமுத்து: "ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது.. " ஆதாரத்துடன் இருப்பதாக ஆடியோ வெளியிட்டு பகீர் கிளப்பிய ஐஸ்வர்யா..!



Vairamuthu cant escape audio by aishwarya

பாடகி சின்மயி தனது டுவிட்டர் பக்கத்தில் பிறர் அவருடன் பகிரும் பாலியல் தொல்லைகள் பற்றிய புகார்களை வெளியிட்டு வருகிறார். இந்த வலையில் பல பிரபலங்கள் சிக்கி சின்னாபின்னமாகின்றனர். 

அந்த வகையில் சமீபத்தில் அவர் கவிஞர் வைரமுத்து பற்றி வெளியிட்ட பாலியல் புகார் மிகுந்த சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்நிலையில் அவர் அடுத்த ஒரு சினிமா பிரபலத்தினை பற்றிய பாலியல் புகாரை வெளியிட்டுள்ளார். 

Vairamuthu cant escape audio by aishwarya

இதனைத்தொடர்ந்து #MeToo என்ற ஹேஷ்டேக்கின் மூலம் வைரமுத்து மீது பல பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுக்களையும் அடுக்கி வருகின்றனர். இதனால் சின்மயிக்கு ஆதரவு பெருகி வருகிறது. 

இந்நிலையில் பாடகி சின்மயி கூறுவது பொய் என்றும், நிகழ்ச்சி ஏற்பட்டாளர் சுரேஷ் என்பரும், வைரமுத்துவும் கருத்து தெரிவித்து இருந்தனர். மேலும், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சீமான் உள்ளிட்டோரும் வைமுத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து இருந்தனர். வைரமுத்து சட்டப்படி எதனையும் சந்திக்க தயாராக இருப்பதாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டார். 

இவ்வாறு இந்த பிரச்சனை சூடுபிடித்திருக்கும் இந்த சமயத்தில் ஐஸ்வர்யா என்ற பெண் வைரமுத்துவிற்கு எதிராக மிரட்டலான ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வைரமுத்து அவரது தோழிக்கு கவிதை மூலம் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்துள்ளார். 

அதில் அந்த பெண் பேசியுள்ளதாவது,  "ஹலோ வைரமுத்து அவர்களே.. நீங்கள் எனது குரலைக் கேட்டதும் உங்களுக்கு என் ஞாபகம் வந்திருக்கும். நான் நீங்கள் நல்லவரா கெட்டவரா என்ற விஷயத்திற்கு வரவில்லை. ஆனால், எனக்கு நல்லா தெரியும் நீங்க தப்பு பண்ணியிருக்கீங்க. நான் என்னுடைய தோழிக்காக இப்ப பேசுறேன். 

அவளுக்கு வயது 24. நீங்கள் சிறப்பு விருந்தினராக நிகழ்ச்சி ஒன்றிற்கு வந்தபோது, எல்லோரும் உங்களிடம் ஆட்டோகிராப் வாங்கினார்கள். அப்போது எனது தோழியும் உங்களிடம் ஆட்டோகிராப் வாங்கினாள். அந்த நேரத்தில் நீங்கள் அவளுடைய போன் நம்பரை கேட்டீங்க. அவளும் அப்பா ஸ்தானத்தில் உங்களை வைத்து போன் நம்பரை கொடுத்தாள்.

ஆனால், அன்றிரவு நீங்கள் எனது தோழிக்கு போன் செய்து எவ்வளவு அநாகரீகமாக கவிதை சொன்னீர்கள் என்று தெரியுமா. உங்களுக்கு தெரியும். அந்தக் கவிதை சொன்னால் உங்களுக்கு தெரியும். அதை சொல்லுகிறேன் கேளுங்க.. ‘உன் இடுப்போ ஒரு உடுக்கை, உன் மார்போ ஒரு படுக்கை'' இந்தக் கவிதை உங்களுடையதுதான். அதை என்னால் நிரூபிக்க முடியும். நீங்கள் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது. நீங்கள் செய்த தவறை ஒப்புக் கொள்ளுங்கள்" என்று பேசியுள்ள அந்த பெண் சின்மயியின் இந்த துணிச்சலுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார். 

இவ்வாறு வைரமுத்துவிற்கு எதிராக ஆதரவு பெருகிவரும் நிலையில் அவரால் "ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது.. " என்று தான் தெரிகிறது. என்ன தான் நடக்கும் என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.