ஊரடங்கு தடையை மீறி மஞ்சுவிரட்டு.! மாடு முட்டியதில் போலீஸ்காரர் கண் பாதிப்பு.!

ஊரடங்கு தடையை மீறி மஞ்சுவிரட்டு.! மாடு முட்டியதில் போலீஸ்காரர் கண் பாதிப்பு.!


Vadamadu jallikattu in sivagangai

சிவகங்கை அருகே தடையை மீறி வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது அதை தடுக்க முயன்றபோது மாடு முட்டியதில் போலீஸ்காரர் ஒருவருக்கு கண் பாதிக்கப்பட்டது. இதுதொடர்பாக 8 பேரை கைது செய்தனர்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி பல உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தொடங்கிய இந்த கொடூர வைரஸ் உலக நாடுகள் முழுவதும் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்தியாவில் சற்று குறைவாக இருந்தது.

இந்தியாவில் பாரத பிரதமர் மோடி சரியான நேரத்தில் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தியதால், இந்த கொடூர வைரஸ் சற்று கட்டுப்படுத்தப்பட்டது. டெல்லியில் நடந்த மாநாட்டில் பங்கேற்றவர்களால் இந்தியாவிலும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கத் தொடங்கியது. தமிழகத்திலும் கொரோனா அச்சுறுத்தல் சற்று அதிகரித்து வருகிறது.

இதனால் தமிழகத்தில் ஊரடங்கு கடுமையாக்கபட்டது. கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் எந்ததொரு பொதுநிகழ்ச்சியோ, விழாவோ நடத்த கூடாது, 5நபர்கள் ஒன்றாக வெளியே வரக்கூடாது. பொதுமக்களும் தகுந்த காரணம் இல்லாமல் அனாவசியமாக வெளியே வர கூடாது என தெரிவிக்கப்பட்டது.

jallikattu

இந்தநிலையில் சிவகங்கை மாவட்டம் கீழக்கோட்டையில் நேற்றுமுன்தினம் தடையை மீறி வடமாடு மஞ்சுவிரட்டு நடந்ததுள்ளது. தகவலறிந்த மதகுபட்டி போலீஸார் அங்கு சென்றபோது வடமாடு மஞ்சுவிரட்டில் இருந்தவர்கள் தப்பியோடினர். அங்கு களத்தில் நின்ற மாடு தலைமை காவலர் கனகராஜை (36) முட்டியது. இதில் அவரது கண் பாதிக்கப்பட்டது. காயமடைந்த காவலரை மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் அவரது கண் பறிபோனதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து 30 பேர் மீது மதகுபட்டி போலீஸார் வழக்கு பதிந்து 8 பேரை கைது செய்தனர். இது தொடர்பாக போலீசார் மற்றும் பலரை தேடி வருகின்றனர்.