மருத்துவரின் 8 வயது மகன் கடத்தி கொலை.. பணிநீக்கம் செய்ததால் முன்னாள் ஊழியர்கள் வெறிச்செயல்.!

மருத்துவரின் 8 வயது மகன் கடத்தி கொலை.. பணிநீக்கம் செய்ததால் முன்னாள் ஊழியர்கள் வெறிச்செயல்.!


Uttar Pradesh Doctor 8 Aged Son Kidnapped and Murder by Former Employee

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள புலந்த் சாகர் மாவட்டம், டெபாய் நகரில் வசித்து வரும் மருத்துவரின் 8 வயது மகன் வெள்ளிக்கிழமை மாயமாகியுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக மருத்துவர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

விசாரணையில், மருத்துவரின் குழந்தையை கடத்தியதாக, முன்னாள் ஊழியர்கள் 2 பேரிடம் அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்துள்ளனர். அப்போது, சிறுவன் கடத்தி கொலை செய்யப்பட்டது உறுதியானது. 

Uttar pradesh

மருத்துவரிடம் கம்பவுண்டராக பணியாற்றி வந்த நிஜாம் மற்றும் ஷாஹித் ஆகியோர் பணியில் தவறு செய்ததால், அவர்களை பணியில் இருந்து மருத்துவர் நீக்கி இருக்கிறார். இந்த சம்பவம் கடந்த 2 வருடத்திற்கு முன்னதாக நடைபெற்றுள்ளது. இதனால் ஆத்திரத்தில் இருந்த 2 பேரும், மருத்துவரை பழிவாங்க எண்ணியுள்ளனர். 

உடனே ஏதேனும் செய்தால் கொலை வழக்கில் சிக்கிக்கொள்வோம் என்று உணர்ந்த இருவரும், 2 வருடம் கழித்து மருத்துவரின் மகனை கடத்தி கொலை செய்துள்ளனர். ஆனால், காவல் துறையினர் விசாரணை செய்து இருவவரையும் அதிரடியாக கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பகுதியில் பேரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.