தமிழகம்

மிக அதி தீவிர புயலாக மாறுகிறது உம்பன் புயல்..! இந்த பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு..! வானிலை ஆய்வு மையம் தகவல்..!

Summary:

Umban cyclone lateat update

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான உம்பன் புயல் மிக அதி தீவிர புயலாக மாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள தகவலின்படி, தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான உம்பன் புயல் வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் மணிக்கு 6 கிலோமிட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாகவும், ஒடிசாவில் இருந்து 1000 கிலோமீட்டர் தொலைவில் தென்திசையிலும், மேற்கு வங்கத்தில் இருந்து 1160 கிலோமிட்டர் தெற்கு மற்றும் தென்மேற்கு திசையிலும் நிலைகொண்டிருப்பதாக கூறியுள்ளது.

மேலும், அடுத்த 12 மணிநேரத்தில் இந்த புயல் தீவிர புயலாக மாறும் எனவும், அதன்பிறகு அதிதீவிர புயலாக மாற உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் மழைபெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement