அரசியல் தமிழகம்

மறைந்த காடுவெட்டி குரு இல்லத்தில் உதயநிதி ஸ்டாலின்! அனல் பறக்கும் தேர்தல் களம்.!

Summary:

மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி ஜெ.குருவின் தாயார் கல்யாணியிடம் நலம் விசாரித்தார் உதயநிதி ஸ்டாலின்.

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. இந்தநிலையில், அரசியல் கட்சியினர் பல்வேறு தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அணைத்து கட்சியினரும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள உதயநிதி ஸ்டாலின்,அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டி கிராமத்தில் உள்ள மறைந்த பா.ம.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், வன்னியர் சங்க மாநில தலைவர் குருவின் வீட்டிற்கு ஜெ.குருவின் படத்திற்கு திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று,மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதனையடுத்து, ஜெ.குருவின்  தாயார் கல்யாணியிடம் ஆசி பெற்றார். பின்னர் குருவின் மகன் கனலரசனையும் சந்தித்துப் பேசினார். வன்னியர் சமுதாய மக்களின் பலமான பிரபலமாகத் திகழ்ந்தவர் காடுவெட்டி குரு. இவரது இயற்பெயர் குருநாதன். காடுவெட்டி கிராமத்தில், பிறந்ததால் ஊர் பெயரையும் சேர்த்து காடுவெட்டி குரு என அழைக்கப்பட்டார். வன்னிய சமுதாயத்தினர் இவரை "மாவீரன் குரு" என்றும் அழைப்பார்கள். ஜெ.குரு கடந்த 2018 அன்று உடல் நிலை சரியில்லாமல் மரணமடைந்தார்.


Advertisement