நிதியுதவி கேட்டு கோரிக்கை வைத்த இந்திய அணி வீராங்கனை.! உடனே கூப்பிட்டு நிதியுதவி வழங்கிய உதயநிதி.!

நிதியுதவி கேட்டு கோரிக்கை வைத்த இந்திய அணி வீராங்கனை.! உடனே கூப்பிட்டு நிதியுதவி வழங்கிய உதயநிதி.!


udhyanithi stalin give fund to women player

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக அமோக வெற்றிபெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தபிறகு மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். கொரோனாவை கட்டுப்படுத்துவதிலும் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இந்தநிலையில், திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், நாள்தோறும் தொகுதியின் பல பகுதிகளுக்கு சென்று பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்குவது, தடுப்பூசி முகாம்களில் கலந்துகொள்வது என தீவிர மக்கள் பணியில் ஈடுபட்டு வருகிறார். 

இந்தநிலையில், சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் கோவைக்கு சென்றபோது, நாமக்கல் குமாரபாளையம் பகுதியை சேர்ந்த இந்திய Fist Ball ஜூனியர் அணி வீராங்கனை தபஸ்வினி, ஆஸ்த்ரியாவில் நடக்கும் போட்டியில் பங்கேற்க நிதியுதவி செய்யுமாறு கோரிக்கைவைத்துள்ளார். இந்தநிலையில், அவருக்கு ரூ.1.70 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார் உதயநிதி. அவருடன் அமைச்சர் செந்தில் பாலாஜியும் உடனிருந்தார்.

இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில், "நாமக்கல் குமாரபாளையம் தபஸ்வினி இந்திய Fist Ball ஜூனியர் அணி வீராங்கனை. ஆஸ்த்ரியாவில் நடக்கும் போட்டியில் பங்கேற்க நிதியுதவி செய்யுமாறு என் கோவை பயணத்தின்போது சந்தித்து கோரிக்கை வைத்திருந்தார். இன்று அவருக்கு ரூ.1.70 லட்சம் நிதியுதவி வழங்கினோம். வாழ்த்துகள்." என குறிப்பிட்டுள்ளார்.