நடிகர் உதயநிதியை குழந்தை பருவத்தில் பார்த்துள்ளீர்களா.? கைக்குழந்தையாக யாருடன் இருக்கிறார் பாருங்கள்.!

நடிகர் உதயநிதியை குழந்தை பருவத்தில் பார்த்துள்ளீர்களா.? கைக்குழந்தையாக யாருடன் இருக்கிறார் பாருங்கள்.!


udhayanithi-childhood-photo-viral

தமிழ் திரையுலகில் முதலில் தயாரிப்பாளராக வளம் வந்து, அதன்பின் ஹீரோவாக அறிமுகமானவர் உதயநிதி ஸ்டாலின். ஆதவன் படத்தை முதலில் தயாரித்து, அதன்பின் ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். தனது முதல் படமே அமோக வெற்றி பெற்றதால் அடுத்தடுத்து படங்களில் ஹீரோவாக நடிக்கத் தொடங்கினார் உதயநிதி.

இதனையடுத்து அவர் நடித்த மனிதன், நண்பேன்டா, இது கதிர்வேலன் காதல், கெத்து, கண்ணேகலைமானே, சரவணன் இருக்க பயம் ஏன், கடைசியாக வெளியான சைக்கோ படம் வரை நல்ல ஹிட் படங்களை கொடுத்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். மேலும், தற்போது ஆர்டிகள் 15 எனும் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார்.

udhayanithi

ஒரே சமயத்தில் சினிமா மற்றும் அரசியல் இரண்டிலும் கலக்கி வருகிறார் உதயநிதி. திமுக இளைஞர் அணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சென்னை திருவல்லிக்கேணி -சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில் நடிகரும், திருவல்லிக்கேணி -சேப்பாக்கம் தொகுதி MLA வுமான உதயநிதி ஸ்டாலினின் குழந்தை பருவ புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் அவரது தாத்தா திரு. கலைஞர் கருணாநிதி மற்றும் தனது தந்தை, தமிழகத்தின் முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் இருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.