தமிழகம் சினிமா

நடிகர் தீப்பெட்டி கணேசன் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய உதயநிதி ஸ்டாலின்.!

Summary:

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்தவர் நடிகர் தீப்பெட்டி கணேசன். இவருக்கு மனைவி மற்றும் இரு

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்தவர் நடிகர் தீப்பெட்டி கணேசன். இவருக்கு மனைவி மற்றும் இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். ரேனிகுண்டா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானார் நடிகர் தீப்பெட்டி கணேசன். இவர் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தென்மேற்கு பருவ காற்று படத்திலும், அஜித்தின் பில்லா 2 , விஷ்ணு விஷாலின் நீர்ப்பறவை,  நயன்தாராவின் கோலமாவு கோகிலா என அடுத்தடுத்து சில படங்களில் நடித்தார் தீப்பெட்டி கணேசன்.

தொடர்ந்து படங்களில் நடித்துவந்த இவர் கடைசியாக இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான கண்ணே கலைமானே படத்தில் நடித்திருந்தார். வறுமையால் மிகுந்த மன வேதனையில் இருந்த இவரது உடல் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று காலமானார். 

 நடிகர் தீப்பெட்டி கணேசனின் மறைவிற்கு சினிமா பிரபலங்கள் இணையம் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், மதுரைக்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த உதயநிதி ஸ்டாலின், தீப்பெட்டி கணேசன் மறைவுத் தகவல் அறிந்ததும் ஜெய்ஹிந்த்புரத்திற்கு சென்று தீப்பெட்டி கணேசன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.  மேலும் தி.மு.க. சார்பில் நிதி உதவியும் வழங்கப்பட்டது.
 


Advertisement