கதறிய அழுத அரசி புயலாக மாறிய தருணம்! கழுத்திற்கு வந்த கத்தி! பாண்டியன் ஸ்டோர்ஸ் புரோமொ வீடியோ.....
காட்டிற்குள் வெறிச்செயல்? வனப்பகுதியில் படுத்துக்கிடந்த இரு உடல்..! சொகுசு காரில் நடந்தது என்ன?.!
கேரளாவை சேர்ந்த இருவர் சடலமாக மீட்கப்பட்டதில் கொலையா? தற்கொலையா? என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நல்லம்பள்ளி அருகே முத்தம்பட்டி ஆஞ்சநேயர் கோயில் செல்லும் வழியில், பூதனல்லி வனப்பகுதியில் கல்குவாரி ஒன்று இருக்கிறது. இந்த நிலையில் அந்த கல்குவாரி அருகே இரண்டு சடலங்கள் கிடப்பதாக கால்நடை மேச்சலுக்கு சென்றவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த அதியமான் கோட்டை காவல்துறையினர் சடலங்கள் இருக்கும் இடத்தை ஆய்வு செய்தனர். அப்போது இருவரது சடலமும் 10 மீட்டர் இடைவெளியில் இருந்துள்ளது. இதனை தொடர்ந்து சடலத்திலிருந்து 100 மீட்டர் தூரத்தில் கேரள பதிவெண் கொண்ட ஒரு சொகுசுகார் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இரண்டு பேரின் சடலத்திலும் லேசான காயங்கள் இருந்ததை காவல்துறையினர் கண்டறிந்தனர். பின் சம்பவஇடத்திற்கு நேரில் சென்று தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் ஆய்வு செய்தபோது, கார்பதிவு எண்ணை வைத்து இருவரும் கேரளாவை சேர்ந்த நிக்கோல் குருஸ் மற்றும் சிவக்குமார் என்பது தெரியவந்தது.
கேரளாவை சேர்ந்த இவர்கள் இருவரும் தர்மபுரியில் சடலமாக கிடந்ததால் இது தற்கொலையா? அல்லது யாரேனும் கொலை செய்துவிட்டு வனப்பகுதியில் வீசிச் சென்றனரா? என்ற கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் மோப்பநாய் பைரவா வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்து தடயங்களை சேகரித்த பின், தடவியல் நிபுணர்களை வைத்து ஆய்வு செய்தனர். பின் இருவரின் சடலங்களையும் மீட்ட காவல்துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, சொகுசு கார் மற்றும் சில உடைமைகளையும் கைப்பற்றி தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.