தமிழகம் இந்தியா

அப்பாவி போல் இருந்த ஆந்திரா இளைஞர்கள்.. சேலத்தில் வேலை.. தேடிவந்த பெங்களூரு போலீஸ்.. வெளிவந்த அதிர்ச்சி உண்மை..

Summary:

கஞ்சா போதையில் நண்பனை கொலை செய்த இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

கஞ்சா போதையில் நண்பனை கொலை செய்த இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பவித்ரன் என்ற இளைஞர் கடந்த 12 ஆம் தேதி பலத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்டு பெங்களுருவில் கண்டெடுக்கப்பட்டார். அவர் எப்படி இறந்தார்? கொலையா? யார் கொலை செய்தது என்பது தொடர்பாக பெங்களூரு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்துவந்தனர்.

இந்நிலையில் இறந்துபோன பவித்ராவின் செல்போன் சிக்னல், தமிழ்நாடடில் சேலம் அருகே காட்டுவதை போலீசார் கண்டறிந்தனர். இதனை அடுத்து சேலம் போலீசாரின் உதவியுடன் பெங்களூரு போலீசார் குற்றவாளிகளை தேடிவந்தனர். இநிலைலையில் செல்போன் சிக்னலை வைத்து சந்தைபேட்டையில் உள்ள உணவகத்தில் பணியாற்றி வந்த 2 அசாம் மாநில இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இதுகுறித்து விசாரித்தபோது, இருவரும் பவித்ராவின் நண்பர்கள் என்பதும், கஞ்சா போதையில் அவரை அடித்து கொலை செய்ததும் தெரியவந்தது. இதனை இருவரும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


Advertisement