சசிகலா எப்போது தமிழகம் வருகிறார்.? யாரெல்லாம் சசிகலா பக்கம் இருக்கிறார்கள்.? டிடிவி தினகரன் என்ன கூறியுள்ளார்.?

சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா, கடந்த 27-ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அவருக்கு ஏற்பட்ட கொரோனா தொற்று மற்றும் உடல்நிலை கோளாறு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சசிகலா, முழுமையாக குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
ஒருவாரம் தனிமைப் படுத்திக்கொள்ள வேண்டும் என்ற மருத்துவர்களின் அறிவுரையின்படி, பெங்களூருவில் உள்ள இல்லத்தில் தங்கி ஓய்வு எடுத்து வருகிறார். இந்நிலையில் பெங்களூருவில் தங்கியிருக்கும் சசிகலா 7ம் தேதி தமிழகம் வருகிறார் என டிடிவி தினகரன் தெரிவித்தார்.
புரட்சி தலைவியின் உண்மையான தொண்டர்கள், விஸ்வாசத்தின் பக்கம் உள்ளவர்கள், சசிகலா பக்கம் இருக்கிறார்கள் என மதுரையில் நடந்த திருமண விழாவில் டிடிவி தினகரன் தெரிவித்தார். இந்தநிலையில் சசிகலா தமிழகம் வருகையில் பலத்த வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.