சசிகலாவின் கணவர் ம.நடராஜன் அவர்களின் இரண்டாவது நினைவுதினம்! மரியாதையை செலுத்திய டிடிவி தினகரன்!
புதிய பார்வை ஆசிரியர் மற்றும் சசிகலாவின் கணவரும் ஆன ம.நடராஜன் அவர்களின் இரண்டாவது நினைவுதினமான நேற்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மரியாதை செலுத்தினார்.
புதிய பார்வை ஆசிரியர் மற்றும் சசிகலாவின் கணவரும் ஆன ம.நடராஜன் உடல்நலக்குறைவால் கடந்த 2018 ஆம் ஆண்டு 20 ஆம் தேதி உயிரிழந்தார். அவருடைய இரண்டாவது ஆண்டு நினைவு தினமான இன்று, சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா சிறையில் இருந்து வெளியே வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்தநிலையில் ம.நடராஜன் அவர்களின் இரண்டாவது ஆண்டு நினைவு தினமான நேற்று , அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தஞ்சை ,விளார் பகுதியில் அமைந்துள்ள ம.நடராசனின் நினைவிடத்துக்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
கொரோன அச்சுறுத்தலால் அமமுக இளைஞர்களும் தனித்தனியே வந்து ம.நடராசனின் நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தியுள்ளனர்.