தமிழ் மொழிக்கு வந்த சோதனை.! மத்திய அரசின் கண்டிக்கத்தக்க செயல்..! கொந்தளித்த டிடிவி தினகரன்..!

தமிழ் மொழிக்கு வந்த சோதனை.! மத்திய அரசின் கண்டிக்கத்தக்க செயல்..! கொந்தளித்த டிடிவி தினகரன்..!



TTV Dhinakaran Condemn about Central Govt Educational Policy


மத்திய அரசு தேசிய கல்விக்கொள்கை ஆவணத்தை ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் ஏற்கனவே வெளியிட்டு இருந்த நிலையில், நேற்று தமிழ் இல்லாமல் கன்னடம், மலையாளம், குஜராத்தி உட்பட 17 பிராந்திய மொழிகளில் தேசிய கல்விக்கொள்கை ஆவணம் வெளியிடப்பட்டது. 

தமிழ் மொழியில் தேசிய கல்விக்கொள்கை வெளியிடாதது தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில், " தேசிய கல்விக் கொள்கையை பல பிராந்திய மொழிகளில் வெளியிட்டுள்ள மத்திய அரசு, தமிழ் மொழியில் மட்டும் அதனை வெளியிடாதது கண்டனத்திற்குரியது. 

புதிய கல்விக் கொள்கையை பொறுத்தமட்டில் உரிய திருத்தங்களையும், மாற்றங்களையும் கொண்டுவர வேண்டுமென அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உட்பட தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியிருந்த நிலையில், இறுதி செய்யப்பட்ட கொள்கை வடிவத்தை இதுவரை தமிழில் வெளியிடாததை ஏற்கமுடியாது. மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட்டு, தமிழ் மொழியிலும்  அதை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்." என தெரிவித்துள்ளார்.