#JUSTIN || டிடிஎஃப் வாசன் சென்ற கார் விபத்து..!

#JUSTIN || டிடிஎஃப் வாசன் சென்ற கார் விபத்து..!



ttf-vasan-car-accident

டிடிஎஃப் வாசன் சமூகவலைத்தளத்தில் பைக் ரேஸ் மூலம் பிரபலமானவர். இவருக்கு மிக பெரிய அளவில் ரசிகர் கூட்டம் இருக்கிறது. அதிலும் குறிப்பாக கல்லூரி பருவமுடைய இளைஞர்கள் இவர் மீது வெறியாக இருப்பார்கள். இவரை போல பைக் ரேஸ், பைக் ரைட் விரும்பிகள் பலர் இவரை பின்தொடர்ந்து வருகிறார்கள். அவ்வப்போது இவர் பல சர்ச்சைகளில் சிக்கி போலீஸ் கேஸ் என்று சென்று வருவார். 

TTF Vasan

இந்த நிலையில், சென்னை அமைந்தகரை அருகே டிடிஎஃப் வாசன் சென்ற கார் விபத்தில் சிக்கியுள்ளது. பின், அவர் அந்த காரில் இருந்து இறங்கி ஆட்டோவில் ஏறி சென்றுள்ளார். பெரிய அளவு ஏதும் சேதம் ஏற்படவில்லை என்று தெரிகிறது. 

டிடிஎஃப் வாசன் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் முதல் போஸ்டர் அண்மையில் வெளியானது குறிப்பிடத்தக்கது. இதனால், மஞ்சள் வீரன் படப்பிடிப்புக்காக சென்னையில் முகாமிட்டுள்ளார் போலும்.