#JUSTIN: மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 எப்போது? அமைச்சர் மரியவில்சன் கூறிய நல்ல செய்தி..!



Minister Maria Wilson about Magalir Urimaithogai 2500 

வெள்ளை அறிக்கை மற்றும் பட்ஜெட்டுடன் மகளிர் உரிமைத்தொகை தொடர்பான தகவல் தெரிவிக்கப்படலாம்.

தேர்தல் வாக்குறுதி:

தமிழ்நாடு அரசை வழிநடத்தி வரும் தமிழக வெற்றிக் கழகம், 2026 தேர்தலின்போது தனது வாக்குறுதியாக மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 வழங்கப்படும் என தெரிவித்து இருந்தது. அந்த வகையில், தற்போது அரசு பொறுப்பில் அமர்ந்துள்ள தவெக, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவும் மும்மரம் காண்பித்து வருகிறது. ஒவ்வொரு இல்லத்தரசிகளின் எதிர்பார்ப்பாக மாதம் ரூ.2500 உரிமைத்தொகையும் இடம்பெற்றுள்ளது.

இதையும் படிங்க: விஜயின் ஆட்சிக்கு எதிர்ப்பு? மௌனம் களைத்த மு.க. ஸ்டாலின்.. என்ன சொன்னார் தெரியுமா?

TN politics

அமைச்சர் உறுதி:

இந்நிலையில், நிதியமைச்சர் மரிய வில்சன் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "தமிழ்நாடு நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். 2 வாரத்தில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய குழு பணியாற்றிக்கொண்டு இருக்கிறது. இந்த வெள்ளை அறிக்கை மக்களுக்கு தெளிவான விபரத்துடன் தெரிவிக்கப்படும். மகளிர் உரிமைத்தொகை தொடர்பான அறிவிப்பும் அனைத்தும் தெரியவரும்" என பேசினார். 

இதையும் படிங்க: தமிழகமே எதிர்பார்பில்.... சொன்ன சொல்லை இன்னும் 2 வாரத்தில் காப்பாற்ற போகும் முதல்வர் விஜய்! அம்பலமாக போகும் கஜானா ரகசியம்..!!!