தமிழகமே எதிர்பார்பில்.... சொன்ன சொல்லை இன்னும் 2 வாரத்தில் காப்பாற்ற போகும் முதல்வர் விஜய்! அம்பலமாக போகும் கஜானா ரகசியம்..!!!
தமிழகத்தின் நிதிநிலை குறித்து பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள வெள்ளை அறிக்கை இன்னும் இரு வாரங்களில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. த.வெ.க அரசு பொறுப்பேற்ற பிறகு வெளியிடப்படும் முக்கிய ஆவணமாக இது பார்க்கப்படுகிறது. இதை நிதியமைச்சர் மரிய வில்சன் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.
முதலமைச்சர் விஜய், பதவியேற்றபோது தமிழகத்தின் நிதி நிலவரம் குறித்து முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார். அந்த வாக்குறுதியின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அறிக்கை தற்போது இறுதிக்கட்ட பணிகளில் இருப்பதாக கூறப்படுகிறது.
சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய திட்டம்
தகவலின்படி, அறிக்கை விரைவில் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. கடந்த ஆண்டுகளில் மாநிலத்தின் வருவாய், செலவினங்கள், கடன் நிலை, நிதி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இதில் விரிவாக இடம்பெறும் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: இன்பச் செய்தி! மகளிர் உரிமைத்தொகை உயர்வு..? முதல்வர் ஸ்டாலினின் வெளியிடப்போகும் முக்கிய அறிவிப்பு!
இதனால் அரசியல் வட்டாரங்களில் இந்த அறிக்கைக்கு கூடுதல் முக்கியத்துவம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக முந்தைய ஆட்சிக் கால நிதி முடிவுகள் மற்றும் நிர்வாக நடைமுறைகள் குறித்து பல்வேறு விவரங்கள் வெளிச்சத்துக்கு வரலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
அரசியல் களத்தில் அதிகரிக்கும் எதிர்பார்ப்பு
அறிக்கை வெளியாகும் முன்பே கோட்டை வட்டாரத்திலும் அரசியல் கட்சிகளிடையிலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாநிலத்தின் உண்மையான நிதிநிலை என்ன என்பதை பொதுமக்களும் அரசியல் தரப்பினரும் அறிய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அதன்பின் வெளியாகும் தகவல்கள் தமிழக அரசியலில் புதிய விவாதங்களுக்கு வழிவகுக்கலாம் என்றும், சட்டமன்றத்திலும் அதனைத் தொடர்ந்து தீவிரமான விவாதங்கள் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க: கஜானா மொத்தமும் காலி...தமிழக அரசின் நிதிநிலைமை குறித்து விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடுவேன்! செம ஷாக்கில் திமுக...!!!