'திமுக காரன் சாதாரணமா வரலடா' அரங்கம் அதிர்ந்த கைத்தட்டு, விசில் சத்தம்.. டிஆர்பி ராஜா அனல்பறக்க பேச்சு.!
திராவிட மாடல் ஆட்சி முந்தைய ஆட்சியின் தவறுகளை பல முறைகள் சரி செய்துள்ளது என டிஆர்பி ராஜா பேசினார்.
விடியல்:
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, "தமிழ்நாடு இந்தியாவின் நம்பர் 1 மாநிலமாக வளர்ந்திருக்கிறது என்றால், அதற்கு காரணம் பெரியாரும், அண்ணாவும், முத்துவேல் ஸ்டாலின் கருணாநிதியால் தான். அவர்களின் முயற்சியால் இதுவரை வரலாறு காணாத வளர்ச்சியை கொடுத்தார். சுமார் 10 ஆண்டுகால இருண்ட ஆட்சிக்கு விடுதலை கொடுத்து விடியல் கொடுத்த ஆட்சி திராவிட மாடல் ஆட்சி.
இதையும் படிங்க: Edappadi Palanisamy: அரசு ஊழியர்களுக்கு மிட்டாய் கொடுத்த திமுக அரசு - எடப்பாடி கே. பழனிச்சாமி கடும் தாக்கு.!

சூரியன்:
எளிதாக ஒருபொருள் கிடைத்துவிட்டால் அதன் மதிப்பு தெரியாது என கூறுவார்கள். அதனால் ஒருசிலருக்கு அந்த மதிப்பு தெரியவில்லை. அதனால் ஒருசில விஷயங்களும் நடந்துவிட்டது. இப்படி அடிக்க அடிக்க இன்னும் வேகமாக எழும் இயக்கம் திராவிட முன்னேற்ற கழகம். இன்று மட்டும் சிலரின் துரோக செயல்கள் இல்லை. 75 ஆண்டுகளாக, அதற்கு முன்னதாக இளைஞர்களின் இயக்கமாக இருந்து உதித்ததே சூரியன் இயக்கம்.

திமுகக்காரன்:
இன்றும் திமுக இதே எழுச்சியுடன் இருக்கிறது. அதற்கு கொள்கையே காரணம். கொள்கை பிடிப்பு இருக்கும் வரை தமிழ்நாட்டை, தமிழனை யாரும் சீண்டிப்பார்க்க முடியாது. இந்த காலகட்டத்தில் நான் திமுக காரன், திமுக கொடியை எவன் உயர்த்தி பிடிக்கிறானோ அவனே உண்மையான திமுக காரன். காங்கிரஸ் அடக்குமுறை, மிசா என பலவிஷயங்களை திமுக எதிர்கொண்டுள்ளது. வீழ்ந்த தமிழ்நாட்டை 1996, 2006, 2021ல் திமுக மட்டுமே மீட்டது. இன்றும் தன்னெழுச்சியாக திமுக எழும். திமுக காரன் சாதாரணமாக வரவில்லை. அதற்கு பின்னால் 75 ஆண்டுகால வரலாறு இருக்கிறது" என பேசினார்.
இதையும் படிங்க: திருச்சி தொகுதியில் களமிறங்கும் மு.க. ஸ்டாலின்? திமுக MLA பேச்சு.. அறைகூவல் சவால்.!