பொதுமக்களை நிற்கவைத்து சாவகாசமாக மட்டன், காளான் ஆர்டர் கொடுத்த வருவாய் ஆய்வாளர்; வீடியோ லீக்.!Tripur revenue inspector eating mutton

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் நகர வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் தனலட்சுமி. இவர் தனது அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களை கால்கடுக்க சம்பவத்தன்று நிற்க வைத்துள்ளார்.

அப்போது, உணவகத்தில் மட்டன் பிரியாணி, காளான் சில்லி, மட்டன் குழம்பு உட்பட பல உணர்வுகளை ஆர்டர் செய்கிறார். இதனை வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு சென்ற நபர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.

இது திட்டமிடப்பட்டு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டனவா? அல்லது வேறு உள்நோக்க காரணம் உள்ளதா? என விசாரணை நடந்து வருகிறது.