அந்த டாப் நடிகையின் '50 வினாடி'க்கான சம்பளத்தை பார்த்து, மிரளும் திரையுலகம்.!
கள்ளக்காதல் விவகாரம் குடும்பத்திற்கு தெரிந்ததால் சோகம்; ஜோடியாக தற்கொலை செய்து சாவு.!
திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி, காட்டுப்புத்தூர் கிராமம், அண்ணா நகரில் வசித்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 29). இவர் ஐடிஐ பயின்றுவிட்டு விவசாய தொழில்களை கவனித்து வந்துள்ளார். தற்போது வரை திருமணம் ஆகவில்லை.
இதே பகுதியில் வசித்து வருபவர் மோகன்ராஜ். இவர் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். மோகனின் மனைவி கீர்த்தனா (வயது 23). ஓட்டுநரான மோகன் ராஜ் அவ்வப்போது பணி விஷயமாக வெளியே சென்றுவிட்டு, பின் சில நாட்கள் கழித்து வீட்டிற்கு வருவார்.
கள்ளக்காதல் உல்லாசம்
இந்நிலையில், கீர்த்தனா - கிருஷ்ணமூர்த்தி இடையே ஏற்பட்ட பழக்கமானது பின்னாளில் கள்ளக்காதலாக மாறி இருக்கிறது. இதனால் இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். ஒருகட்டத்தில் இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் இருதரப்பு வீட்டாருக்கும் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: காதலனின் வீட்டில் காதலி மர்ம மரணம்.. உடலெல்லாம் காயங்கள்.. பெற்றோர் கண்ணீர் குமுறல்.!
இதனால் அவர்கள் கண்டித்து, கள்ளக்காதலை கைவிட கோரிக்கை வைத்துள்ளார். கள்ளக்காதல் விவகாரம் தெரியவந்ததால், மனமுடைந்துபோன ஜோடி நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கீர்த்தனாவுக்கு 5 வயதுடைய மகள் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இன்ஸ்டாவில் எமனாக வந்த மெசேஜ்; மார்பிங் போட்டோவால் மாணவி தூக்கிட்டு தற்கொலை.!