வசூலில் டாப்.. பாலையா டான்ஸ் வீடியோ வைரல்.! மகிழ்ச்சியில் ஊர்வசியுடன் நடனமாடி குதூகலம்.!
17 வயது சிறுமியை காதலித்து, சீரழித்து வீதியில் நிறுத்திய கல்லூரி காதல்.. 20 வயது இளைஞன் கைது.!
கல்லூரியில் உடன் பயின்ற சிறுமியை காதல் வலையில் வீழ்த்திய இளைஞர், திருமணம் செய்வதாக கடத்தி சென்று 1 மாதத்தில் வீதியில் நிறுத்திய பெரும் சோகம் நடந்துள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை செல்லும் சாலையில் தனியார் எஞ்சினியரிங் மற்றும் பாலிடெக்னீக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில், திருச்சி மற்றும் சுற்றுவட்டார மாவட்டத்தை சேர்ந்த மாணவ - மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரியில் திருச்சியை சேர்ந்த 17 வயது சிறுமி பயின்று வருகிறார்.
இதனைப்போல, திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர், செங்காட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த சங்கீத் (வயது 20) என்பவரும் படித்து வந்துள்ளார். இருவரும் கம்பியூட்டர் டெக்னலாஜி துறையில் பயின்று வந்த நிலையில், இருவரிடையே ஏற்பட்ட நட்பு பின்னாளில் காதலாக மாறியுள்ளது. இந்த விஷயம் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது.
இதனால் சிறுமியின் பெற்றோர்கள் மகளை கண்டித்த நிலையில், கடந்த டிச.17 ஆம் தேதி அவர் மாயமாகி இருக்கிறார். இந்த விஷயம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் சிறுமியை தேடி வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 24 ஆம் தேதி துறையூர் காவல் நிலையம் அருகே சிறுமி இருந்துள்ளார்.
அவரை மீட்ட காவல் துறையினர் நடத்திய விசாரணையில், மாயமான கல்லூரியில் பயின்று வந்த சிறுமி என்பது உறுதியானது. அவரை அதிகாரிகள் காப்பகத்தில் ஒப்படைத்த நிலையில், சங்கீத்தை செங்காட்டுப்பட்டியில் வைத்து கைது செய்தனர். சங்கீதத்தின் மீது போக்ஸோ உட்பட பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.