உப்பு அதிகமானதால் கொடூரம்.. சமையல் மாஸ்டர் மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய பரபரப்பு சம்பவம்.!

உப்பு அதிகமானதால் கொடூரம்.. சமையல் மாஸ்டர் மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய பரபரப்பு சம்பவம்.!



trichendhur-hotel-in-vadagari-extra-salt-issue-UREFQB

வடகறியில் உப்பு அதிகமானதால், ஆத்திரமடைந்த மேலாளர் சமையல் மாஸ்டர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் தெற்குப் புதுத்தெருவில் வசித்து வருபவர் வெள்ளையன் (வயது 56). இவர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அருகாமையில் உள்ள தனியார் ஹோட்டலில் சமையல் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார்.

சம்பவ தினத்தன்று வெள்ளையன் சமைத்துக் கொண்டிருந்தபோது, அதே ஹோட்டலில் மேலாளராக பணிபுரிந்த பாலமுருகன் அங்கு சென்று வடகறி சாப்பிட்டுள்ளார். அப்போது ஏன் வடகறியில் உப்பு அதிகமாக உள்ளது? என்று வெள்ளையனிடம் கேட்டுள்ளார்.

அதற்கு வெள்ளையன், 'நான் இப்பொழுதுதான் சுவைத்துப் பார்த்தேன், உப்பு சரியாக தானே உள்ளது' என்று கூறிய நிலையில், இவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆவேசமடைந்த மேலாளர் பாலமுருகன், அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த எண்ணையை வெள்ளையனின் மீது ஊற்றியுள்ளார்.

trichendhur

இதனால் வலி பொறுக்க முடியாமல் முகம், கால், முதுகு பகுதி வெந்துப்போக வெள்ளையன் கதறித்துடித்துள்ளார். இதனைகண்ட அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 

பின் இந்த விஷயம் தொடர்பாக திருச்செந்தூர் கோவில் காவல்நிலைய காவல்துறையினரிடம் வெள்ளையன் புகாரளித்த நிலையில், வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஹோட்டல் மேலாளரை தேடி வருகின்றனர். 

அத்துடன் வடகறியில் உப்பு அதிகமானதற்கு ஒருவர் கொதிக்கும் எண்ணையை, சமையல் மாஸ்டர் மீது ஊற்றிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.