தமிழகம்

தமிழகம் முழுவதும் பேருந்துகள் ஓடாதா.? போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்.!

Summary:

போக்குவரத்து ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் முடிவடைந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில்,

போக்குவரத்து ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் முடிவடைந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், புதிய ஊதிய ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த அரசு அழைக்கப்படவில்லை என்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான பணம் நிலுவையில் இருப்பதாகவும் போனஸ் தொகை குறைக்கப்பட்டதை வலியுறுத்தி உடனடியாக அரசு தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெறும் என அறிவித்தனர்.

இந்த வேலை நிறுத்தம் காலவரையற்ற வேலைநிறுத்தமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 95 சதவீத தொழிலாளர்கள் இதற்கு ஆதரவு தருவதால் அதிகப்படியான பேருந்துகள் ஓடாது என கூறப்படுகிறது. 

பேருந்துகள் வழக்கதை விட சற்று குறைந்த அளவில் இயக்கப்படுவதால் பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்ளும் போக்குவரத்த்து ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு போக்குவரத்து கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


 


Advertisement