திருச்சி காவலர் பயிற்சி கல்லூரியில் திருநங்கை தற்கொலை முயற்சி.! 2 போலீசார் பணியிடை நீக்கம்.!

திருச்சி காவலர் பயிற்சி கல்லூரியில் திருநங்கை தற்கொலை முயற்சி.! 2 போலீசார் பணியிடை நீக்கம்.!



Transgender Police student suicide attempt in police Training College

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த திருநங்கை ஒருவர் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே நவல்பட்டு அண்ணாநகர் பகுதியில் உள்ள பெண் காவலர் பயிற்சி கல்லூரியில் காவலராக பயிற்சி பெற்று வருகிறார். அவருக்கு பயிற்சியின் போது பாலியல் ரீதியாக அதிகாரிகள் துன்புறுத்துவதாக பயிற்சி கல்லூரியின் டி.ஐ.ஜி. சத்யபிரியாவிற்கு தொலைபேசி மூலம் புகார் செய்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், மனவேதனையில் இருந்த திருநங்கை தற்கொலை செய்துகொள்வதற்காக கடந்த 9 ஆம் தேதி காலை விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதைப்பார்த்த போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விவகாரத்தில் பயிற்சிப் பள்ளியின் உதவி ஆய்வாளா் அசோக்குமாா், தலைமைக் காவலா் இஸ்ரவேல் ஆகியோரைப் பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு பயிற்சிப் பள்ளி டிஐஜி சத்தியபிரியா உத்தரவிட்டாா்.

விஷம் அருந்திய திருநங்கைக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தமிழ்நாடு பயிற்சிப் பள்ளி டிஐஜி கூறுகையில், திருநங்கையின் புகாா் குறித்து விசாரணை நடத்த காவலர் பயிற்சிப் பள்ளிக்கு உத்தரவிட்டிருந்ததாகவும், விசாரணையில்பாலியல் துன்புறுத்தல் உறுதியானதால் நடவடிக்கை எடுக்கப்பட்டது என தெரிவித்தார்.