கத்தி முனையில் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கே இப்படியா? பயிற்சி ஐபிஎஸ் அதிகாரி மீது பகீர் புகார்.!
காவல் உயர் அதிகாரியை ஆபாச வீடியோ எடுத்து கத்தி முனையில் மிரட்டியதாக பயிற்சியில் இருக்கும் நபரின் மீது புகார் எழுந்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
புகார்:
National Police Academy Incident: தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஐதராபாத், தேசிய காவல்துறை அகாடமியில், யுபிஎஸ்சி தேர்வெழுதி ஐபிஎஸ் தேர்ச்சி அடையும் ஆண்-பெண் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனிடையே, பயிற்சிக்கு வந்த ஆண் ஐபிஎஸ் அதிகாரி, பணியில் இருக்கும் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அட்டப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மனைவி குளிப்பதை வீடியோ எடுத்து ரசித்த 20 வயது இளைஞன்.. ஸ்கெட்ச் போட்ட தம்பதி.. அரங்கேறிய சம்பவம்.!

கத்தி முனையில்...
இந்த புகாரில், அதாவது, அகாடமியில் பயிற்சி எடுத்து வரும் உதயகுமார் கிருஷ்ணா ரெட்டி என்பவர் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். செல்போனில் காவல் உயர் அதிகாரிக்கு துணிச்சலாக ஆபாச தகவலை அனுப்பி வந்துள்ளார். கடந்த 9ம் தேதி பெண் அதிகாரியின் தலைமுடியை பிடித்து இழுத்து, கத்தி முனையில் அறையில் தள்ளி பூட்டி இருக்கிறார்.

புகார்:
அங்கு பெண் அதிகாரியை ஆபாசமாக படமெடுத்தவர், செல்போனை பறித்து ஆபாச விடீயோக்களை வாட்சப் மூலம் கணவனுக்கு அனுப்புவதாக மிரட்டி இருக்கிறார். இவரின் மீது நடவடிக்கை வேண்டும் ena பெண் அதிகாரி கேட்டுள்ளார். இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தேசிய alavil விவாதத்தை உண்டாக்கி இருக்கிறது.
இதையும் படிங்க: நண்பருடன் பேசிய பெண்ணை தனியே அழைத்துச்சென்று பாலியல் அத்துமீறல்.. காவலர் கைது.. கோவையில் ஷாக்.!