தமிழகம்

கஜா புயலால் தமிழகத்தில் ரயில் சேவை ரத்து!.

Summary:

train services stopped for kaja cyclone


கஜா புயல் காரணமாக தஞ்சாவூர், கடலூர், நாகை, திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் ஆகிய 7 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளார்கள்.

கஜா புயல் தென்மேற்கு திசையை நோக்கி மெல்ல நகர்ந்து வருகிறது. இதே திசையில் சென்றால் இன்று கடலூர், வேதாரண்யம் இடையே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

train stopped cyclone க்கான பட முடிவு

கஜா புயல் காரணமாக ரயில் எண் 16176/16186 காரைக்கால்/வேளாங்கண்ணி - சென்னை எழும்பூர் விரைவு ரயில், இன்று(நவ 15) முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

 ரயில் எண் 16180 மன்னார்குடி - சென்னை எழும்பூர் 'மன்னை விரைவு ரயில்' இன்று முழுமையாக செய்யப்பட்டுள்ளது.

அதே போல் ரயில் எண் 56723/56724, 56721/56722 மற்றும் 56725/56726 மதுரை - ராமேஸ்வரம் - மதுரை பயணிகள் ரயில் வரும் 15 மற்றும் 16 ஆகிய தேதிகள் ரத்து செய்யப்படுகிறது. 

ரயில் எண் 56829/56830 திருச்சி - ராமேஸ்வரம் - திருச்சி பயணிகள் ரயில் வரும் 15ஆம் தேதி ரத்து செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. 


Advertisement